அருகில் இருந்து - என் காதலை புரிந்து கொள்ளாத நீ நான் இறந்த பின்பு மறந்தும் - என் கல்லறை முன் வந்து அழுது விடாதே.... நான் எழுந்தாலும் எழுந்து வந்து விடுவேன் உன் கண்ணீரை துடைப்பதற்கு.............
ஒரு கவிதை எழுத ஆசைப்பட்டு காகிதம் தனை எடுத்து பேனா பிடித்து கவி தொடக்கும் வேளையிலே என் விழி நீர் காகித மடியில் விழுந்து ஞாபகப்படுத்தியது - இப்போது நீ என் காதலி அல்ல மாற்றானின் மனைவி என்று நிறுத்தி விட்டேன் கவிதையை மட்டுமல்ல - உன்மீதான என் காதலையும் கூட